கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அருகே உள்ள சின்ன கானல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரிய நல்லி என்ற பகுதிக்குள் அரிசி கொம்பன் என்ற யானை சுற்றித்திரிந்தது கிட்டத்தட்ட 40 இருக்கு அதிகமான நபர்களைக் கொன்றும் ரேஷன் கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கியும் சாலையில் வரும் வாகனங்களை தடுத்து உடைத்தும் இந்த செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் யானைய உடனடியாக பிடித்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல கோரிக்கை வைத்தனர் .
கோரிக்கையை ஏற்று அரசு யானை பிடிக்க முயற்சி செய்யும்போது திருச்சூரை சார்ந்த ஒரு நபர் யானை பிடிக்க கூடாது என ஸ்டே ஆர்டர் வாங்கினார் இது தொடர்ந்து இரண்டு வாரமாக சூரிய நல்லி மற்றும் சின்னகாணல் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி பின்னர் உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து அரிசி கொம்பன் என்ற யானையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்து அதனை தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் கொண்டு விட்டனர் சில நாட்கள் சுற்றி திரிந்த அந்த யானை தற்பொழுது தேனி மாவட்டம் கம்பம் டவுனில் இறங்கி மக்களை துரத்தி பீதியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு யானையை காட்டிற்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி யானை வந்து துன்புறுத்துவது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது இது மீண்டும் மூனார் பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.