நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள்,
வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
அவர்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக உடல் உபாதைகளை கழிக்க கழிவறைகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
வாகன நிறுத்தங்களில் இ- கழிப்பறைகள் அவசியம் தேவை. பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள வாகன நிறுத்ததில் வாகனங்களை நிறுத்து பவர்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் திண்டாடி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று கழிவறையை உபயோகிக்க அனுமதி கேட்டு கெஞ்சிய காட்சிகள் மனதை உறைய செய்கிறது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ- கழிப்பறைகள் உடனடியாக அமைக்க வேண்டும், ஜி. பி. எஸ் மூலம் கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி, பொது இடங்களில் நிறுவப்படும் கழிப்பறைகளே இ- கழிப்பறைகள் எனப்படுகின்றன. தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் அமைத்து இந்த இ- கழிப்பறைகளை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனியாக வா்ணம் பூசப்படவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.