காரைக்குடி அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்!
ஓட்டுனருடன் கையும் களவுமாக கைது!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லலில் வீட்டு வரிக்கு ₹.13,000 லஞ்சம் வாங்கிய அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரை, அவரது ஓட்டுநருடன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்குடி அருகேயுள்ள கீழகோட்டையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கல்லலில் உள்ள தனது தந்தையின் பெயரில் இருந்த வீடு, இடம் உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து, தனது பெயருக்கு வீட்டு வரி ரசீது கேட்டு கல்லல் ஊராட்சித் தலைவர் நாச்சியப்பனை (55) அணுகினார். ஆனால் பாலாஜி பெயருக்கு வரி ரசீது வழங்குவதற்கு தனக்கு ₹.13,000 லஞ்சமாகத் தர வேண்டும் என நாச்சியப்பன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுக்க விரும்பாத பாலாஜி, இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்தார். இதன் பின்னர் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் பாலாஜி, கல்லலில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த தலைவர் நாச்சியப்பனிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது நாச்சியப்பன் அந்தப் பணத்தை வாங்காமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே உள்ள தன்னுடைய கார் ஓட்டுனரும், நண்பருமான சங்கர் என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைத்தொடர்ந்து பாலாஜி வெளியில் வந்து அங்கு நின்று கொண்டிருந்த சங்கரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜான்பிரிட்டோ, ஆய்வாளர் ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் ராஜா முகமது மற்றும் காவலர்கள் சங்கரை பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்தனர்.
விசாரணைக்கு பின்னர், நாச்சியப்பனையும், அவரது ஓட்டுனரையும் கைது செய்தனர்.
ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சியப்பன், கல்லல் அதிமுக நகரச் செயலாளராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
– பாரூக், சிவகங்கை.