போலீஸ் துறையில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி கோவையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
கோவையில் போலீசாரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவை வந்து இருந்தார். போலீஸ் துறையில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பெண் போலீசார் கலந்து கொண்ட 5 கி.மீ. தூரம் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் போலீசாருடன் சேர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் மாரத்தான் ஓடினார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ரோஸ்கோர்ஸ், அண்ணா சிலை சிக்னல் வழியாக டாக்டர் பாலசுந்தரம் ரோடு வந்து கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து நிறைவடைந்தது. பாலகிருஷ்ணன், போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், சுஹாசினி, மதிவாணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பெண் போலீசாருடன் ஓடினர். மாரத்தானில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும்
போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண் போலீசார் உள்பட 81 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.