மலையாளிகள்/கேரளா வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் கலாச்சார, கலை மற்றும் சமூகத் தனித்துவத்தை மேம்படுத்தவும், அவர்கள் இணைந்து வாழவும், பிற நாட்டு கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் செயல்பட்டு வருகிறது.. உலகம் முழுவதும் உள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பின் மண்டல மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற்றது.வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோவை கிளை ஒருங்கிணைத்த இம்மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மலையாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மண்டல நிர்வாகிகள் பத்மகுமார் நாயர்,ராஜேஷ்குமார்,ராதாகிருஷ்ணன், மற்றும் துணை தலைவர் ராஜன் ஆறுமுகம் ஆகியோர் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன்,சி.ஆர்.பி.எஃப்.மத்திய பயிற்சி கல்லூரி முதல்வர் அஜய் பரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்..இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் செய்த பல்வேறு சமூக நலப்பணிகள் குறித்த சிறப்புமலர் வெளியிடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக வேர்ல்டு மலையாளி கவுன்சல் இந்திய மண்டல தலைவர் ரவி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,உள்நாடு மட்டூமின்றி வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மலையாள மக்கள் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக கொரோனா போன்ற அவசர காலங்களில் வெளிநாடுகளில் உதவியின்றி தவித்த இந்தியர்களுக்கு வேர்ல்டு மலையாளி கவுன்சில் பல்வேறு உதவிகளை செய்தி வந்ததாக தெரிவித்தார்.கதோபோல அண்மையில் உக்ரைனில் ஏற்பட்ட போர் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்த இந்தியர்களுக்கு பெரும் உதவியாக வேர்ல்டு மலையாளி கவுன்சில் செயல்பட்டதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில்,இவ்வமைப்பின் கோவை மண்டல நிர்வாகிகள் ஹரி,விஜயன் செறுவசேரி,வல்சலா வாரியர்,ரவிக்குமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.