கோவை செல்வபுரம் செல்வ சிந்தாமணி குளம் வாக்கர் அசோசியேஷன் மற்றும் நீலு
மெடிக்கல் சென்டர்& டியோபடீஸ் பவுண்டேசன் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.
செல்வ சிந்தாமணி குளத்தில் உள்ள நடைபாதை பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த மரத்தடியில் இன்று காலை 6 மணிக்கே வாக்கர்ஸ்அசோசியேசன் நிர்வாகிகள் முகாம் வேலைகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மருத்துவக் குழுவினர் சிறப்பாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். வாக்கிங் வருகின்ற பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் ரங்கராஜன்,
ஜெகன்,தீபக் ராஜா, கமிட்டி உறுப்பினர் ராஜா, மல்லி ,சீதாலட்சுமி, விஜயலட்சுமி, ஹனீப் பாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று தொடர்ச்சியாக பலமருத்துவ முகாம்களை நடத்த இருப்பதாக செயலாளர் ஜெகன் தெரிவித்தார்!
நாளை வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.