தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சந்திமரிச்சி அம்மன், ஸ்ரீவைரவர் கோவில் திருவிழாவைகொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு , பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 10 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 12 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் L.ரமேஷ் அவர்கள் மற்றும் அ. தி. மு. க 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
இதில் 6 மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை ரூபாய் 25002 ஜஸ்டின் திரவியம் அதிமுக பரிவல்லிக்கோட்டை அவர்கள் கயத்தார் எஸ்பி ஹோட்டல் பெருமாள் நாச்சியார், மாட்டு வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார், 2-வது பரிசை ரூபாய் 20002 ஹரி பாலகிருஷ்ணன் அவர்கள் சங்கம்பட்டி மகாராஜா எஸ் குமார், மாட்டு வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார் , 3-வது பரிசை ரூபாய் 15002 பாலமுருகன் அதிமுக கிளைச் செயலாளர் அவர்கள் முத்தையாபுரம் ஓம் முருகா, மாட்டு வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார் 4 பரிசு மணக்கரை பார்வதி, மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 5-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு ரூபாய் 20002 ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் புதூர் ஏகே டிராவல்ஸ், மாட்டு வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார் , 2-வது பரிசை ரூபாய் 15002 கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் பட்டி அவர்கள் சீவலப்பேரி முகேஷ், மாட்டு வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார்.
, 3-வது பரிசை வெயிலுமுத்து மாகலட்சுமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கம்பட்டி செக்காரக்குடி அபிநயா, வண்டி உரிமையாளர்க்கு வழங்கினார். 4வது பரிசை 4002 அரவிந்த் பாஜக தலைவர் சங்கம்பட்டி அவர்கள் சங்கரப்பேரி வெள்ளைச்சாமி தேவர் அவர்களுக்கு வழங்கினார். இந்த மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.