கோவை மாவட்டம் ஒத்தகால் மண்டபத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், இவரது மகள் வயது 3 ஹார்சினி, நேற்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார் இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹர்சினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.