தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி சுதந்திர போராட்ட வீரர் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் மெய் காப்புபடை தளபதிகள் பொட்டிபகடை முத்தன்பகடை கந்தன் பகடை ஆகியோர்களின் நினைவு நாளில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வில் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன் தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநில பொதுச் செயலாளர் விஸ்வைகுமார் அமைப்பு செயலாளர் திலீபன் மாநில துணை பொதுச் செயலாளர் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேசிய போது சுதந்திர போராட்டத்தில் அருந்ததியர் மக்களின் பங்கு அதிகமாக இருந்தும் ஏனோ அரசுகளுக்கு அவர்களின் தியாகங்கள் புரியவில்லையா அல்லது இவர்களுக்கு எல்லாம் மணிமண்டபம் அமைக்கவா என்கிற பிக்போக்கு என்னமா என்கிற கேள்வி எங்களுக்கு எழுகிறது ஏனேன்றால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுகளிடம் பொட்டி பகடை க்கு தோரனவாயிலும் மணி மண்டபமும் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை எந்த அரசுகளும் அருந்ததியர் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதே எங்களின் வேதனையாக உள்ளது.
ஆகவே தமிழக திராவிட மாடல் அரசாவது உடனடியாக பொட்டி பகடை க்கு தோரனவாயிலும் மணிமண்டபமும் அமைக்க அறிவிக்க அருந்ததியர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்..
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.