பொள்ளாச்சி: பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முழுக்க நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச. தர்மராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி அவர்கள் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜெய் லாபுதீன்.குமரன் நகர் காளிமுத்து .கவிஞர் முருகானந்தம் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியில் தேர்வு எழுதி ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் இனிப்பும் வழங்கி கொண்டாடப்பட்டது .இதில் முதல் மற்றும் அடுத்தடுத்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் கதீஜா நசீமாபர்வீன். பூர்னா உள்ளிட்ட மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நகர மன்ற உறுப்பினரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான கந்த மனோகரி தர்மராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.