தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் மிக நீண்ட நாட்களாக போக்குவரத்து காவலர் வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பெருகிவரும் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.இதனை சமாளிக்கவும் , சாலை பாதுகாப்பை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர் (டிராபிக் போலீஸ்) வேண்டும்.
புதியம்புத்தூர் பகுதியில் ஒரு சில ஆண்டுகளாக போக்குவரத்து காவலர் பணிபுரிந்து வந்தார் அந்த போக்குவரத்து காவலரும் இப்போது இல்லை. புதியம்புத்தூரை தமிழ் நாட்டின் குட்டி திருப்பூர் என்று அழைப்பார்கள்.
ஒட்டப்பிடாரத்திற்க்கு மிக அருகில் நான்கு வழிச் சாலை குறுக்குச் சாலையில் அமைந்துள்ளது. குறுக்குச் சாலையிலிருந்து 10 கிமீ தொலைவில் வாகன சோதனைச்சாவடி ( Toll plaza) உள்ளது. குறுக்குச் சாலையிலிருந்து ஒட்டப்பிடாரம் வழியாக மிக கனரக வாகனங்கள் வந்தவண்ணமாக உள்ளன. இந்த மிக கனரக வாகனங்கள் ஒட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசலை உருவாக்கிறது. இதனால் சாலை விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர் இல்லை.
கடந்த அக்டோபர் மாதம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஒட்டப்பிடாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ஒட்டப்பிடாரத்திலிருந்து குறுக்குச் சாலை செல்லும் வழியில் உள்ளது. நீதிமன்றம் அருகிலும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது.
வ.உசி விரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோர் பிறந்த ஊர் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியாகும். புதியம்புத்தூர் , பசுவந்தனை, குறுக்குச் சாலை, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஒட்டப்பிடாரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் எப்போதும் வென்றான் , மணியாச்சி, பரிவில்லிகோட்டை , பசுவந்தனை, வேடநத்தம் என 6 உள்வட்டங்களையும் 64 பாஞ்சாயத்துகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியமாகும்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தை பேரூராட்சி யாக அறிவிக்கப்படும் என 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார்கள் அது இன்னும் நிலுவையில் உள்ளது.
புதியம்புத்தூர், குறுக்குச் சாலை, ஒட்டப்பிடாரம், பசுவந்தனை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர் (டிராபிக் போலீஸ்) வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு இதற்குக் செவிசாய்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.