கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்தத சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை அம்மா படகு இல்லம் கனமழையில் குப்பைகள் மற்றும் மது பிரியர்களின் பாட்டில்கள் ஆகியவை, மழைநீரில் அடித்து வரப்பட்டு அப்பகுதியில் குவிந்த உள்ளது.
பல முறை இது குறித்து அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கும் அப்பகுதியில், எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியின் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.