தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் இந்தியா மாவட்ட அலுவலகத்தை கம்பம் நகரில் இன்று காலை 10:30 மணி அளவில் மஜக மாவட்ட நிர்வாகிகள், மாணவர் இந்தியா மாவட்ட, நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ பண்பாளர் திரு ,இரா. ராமகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட நிர்வாகிகள் எம் எல் ஏ அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். மாணவர் இந்தியாமாவட்ட நிர்வாகிகள் எம் எல் ஏ அவர்களுக்கு அலுவலக திறப்புக்கான நன்றியினை தெரிவித்து நினைவு பரிசை வழங்கினார். இந்நிகழ்வில்திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள்,அமமுக நிர்வாகிகள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
எம்எல்ஏ அவர்கள் மஜகமாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களின் அரசியல் செயல்பாடு குறித்து நிர்வாகிகளிடம்பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் – கோவை, தேனி.