மின்விளக்கு வசதி இல்லாத சாலை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதி!!
கன்னியாகுமரி மாவட்டம்,தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சியின் கட்டுப்பாட்டின் கிழ் உள்ள பூதப்பாண்டி ஈசாந்திமங்கலம் இணைப்புவழியான தொந்திக்கரை சாலையில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில்
அச்சத்துடன் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் அச்சத்தையும் வாகன ஓட்டிகளின் அச்சத்தையும் தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சில மாதங்களுக்கு முன்பு இந்த பயணவழியில் 10 மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இவற்றில் ஒன்றே ஒன்றுமட்டும் மிளிர்கிறது.இதனால் இப்பகுதியில் பயணம்மேற்கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டுக்களும் பெரும்அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எனவே பூதப்பாண்டி பேருராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் வழிப்பறி விபத்து உள்ளிட்ட இன்னல்கள் ஏற்படுமுன்பு
மின்விளக்குககளை சரி செய்து ஓளிரசெய்திட பூதப்பாண்டி ஊர்மக்கள் சார்பாக சமூக ஆர்வலர்.S.நாராயணசாமி,பூதப்பாண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.