கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள காமராஜ் நகர், அண்ணா நகர், துளசி நகர், பி ஏ பி காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆழ்துளை கிணறு உடன் இணைக்கப்பட்ட மின்மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மின் மோட்டாரை அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு சுவிச்சை ஆன் செய்துவிட்டு சிறிது நேரத்தில் ஆப் செய்து விடுகிறார்.இதனை நகராட்சி குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த பலனும் இல்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.