விஏஓ கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.04.2023 அன்று முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (55) என்பவரை முன்விரோதம் காரணமாக அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்கண்ட வழக்குகளில் கைதான 2பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.