தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111 அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட்டி, மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது.
இந்த அணைப்பகுதியில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் வண்ணம் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கும். ஆங்காங்கே நீரூற்றுகள் மற்றும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்
இவ்வளவு சிறப்பு மிக்க வைகை அணையை தற்போது பார்த்தால் நம் அனைவருக்கும் கண்களில் நீர் நிரம்பிவிடும் அந்த அளவுக்கு சுகாதார சீர்கேடாகவும் குப்பை கழிவுகளும் பிளாஸ்டிக் பாட்டில்களும் நிரம்பி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
அணை என்பது நீரை தேக்கி வைக்க பயன்படும் ஆனால் இங்கு குப்பை கழிவுகளை தேக்கி வைத்திருக்கிறார்கள். வைகை அணையை சுற்றி பார்க்க நுழைவு கட்டணமும் வசூலிக்கிறார்கள். ஆனால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள மட்டும் அக்கறை இல்லாமல் உள்ளார்கள்.
ஒரு புகழ்பெற்ற நீர் தேக்கம் சுகாதாரமற்ற முறையில் இதுபோன்று குப்பை கழிவுகள் நிரம்பிய நிலையில் இருந்தால் யார் சுற்றிப் பார்க்க வருவார்கள்.
நோய் தொற்றுகள் பரவி வரும் இது போன்ற காலகட்டங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் இருக்கும் வைகை அணை நீர் தேக்க பராமரிப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.