வால்பாறையில் குப்பை மற்றும் கழிவுகளால் நிரம்பி இருக்கும் விளையாட்டு மைதானம்!! விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!!

விளையாட்டு மைதானமா?
குப்பை கழிவுகளின் சேமிப்பு கிடங்கா?
மழையினால் ஏற்பட்ட சோதனை!
விளையாட்டு வீரர்கள் வேதனை!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி விளையாட்டு மைதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த விளையாட்டு மைதானத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பயிற்சிக்காக வரும் விளையாட்டு வீரர்கள் மழை பெய்யும் சமயங்களில் ஒதுங்க கூட பாதுகாப்பான இடம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.மேலும் மழை பெய்யும் சமயங்களில் மழை நீரினால் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குப்பை கழிவுகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், மனிதக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் விளையாட்டு மைதானத்திற்குள் வந்து நிரப்பி விடுகிறது.இதனால் விளையாட்டு மைதானம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.

மேலும் மழை நீரினால் அடித்து வரப்படும் கழிவுகளினால் அருகில் நிற்க கூட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இப்படி உள்ள சூழ்நிலையில் விளையாட்டு வீரர்கள் எப்படி பயிற்சியை மேற்கொள்வது? எனவே இது சம்பந்தமான அதிகாரிகள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.மேலும் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரை பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தடையில்லா பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் என்பதால் இதுபோன்ற சிறு சிறு இடர்பாடுகளினால் அவர்களின் பயிற்சி பாதிக்கப்படும் என்பதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வால்பாறைக்கு கால் பத்தாட்ட விளையாட்டின் மூலம் பெருமை சேர்க்க காத்துக் கொண்டிருக்கும் இளம் வீரர்களின் முயற்சிக்கு தடை கற்களாக இருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

One Response

  1. மேற்கண்ட செய்தியை படித்தேன் மிகவும் அருமை இச்செய்தியைத் தந்த ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நானும் எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply to M.சுரேஷ்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts