ஆறு வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல்!!

ஆறு வயது

ஆறு வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல்!!

கோவை: வேகமாக 195 உலக நாடுகளின் பெயர் மற்றும் அந்நாடுகளின் ஸ்பெல்லிங்கை உச்சரித்ததனை அங்கிகரித்து சான்றிதழ் வழங்கிய “INDIA BOOK OF RECORDS”

கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). லோகித் ஒன்றாம் வகுப்பு முடித்துவிட்டு, இரண்டாம் வகுப்பு செல்லவிருக்கின்றார். இந்த நிலையில் பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் லோகித் திகழ்ந்திருக்கின்றார். வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக மனனம் செய்து கொண்டார். வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் ரோகித் அசாத்தியமாக அதனை மனனம் செய்திருக்கின்றார். இதனை கவனித்த சிறுவன் லோகிதின் ஆசிரியர் தர்மதேவ் Mr.தேவ்ஸ் இன்டர்நேசனல் அகாடமியின் உரிமையாளர் லோகித்தின் திறமையை புரிந்துகொண்டு சரியான முறையில் பயிற்சி அளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் பெற்றோர் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்று தர ஆரம்பித்தனர். குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஸ்பெர்லிங்கையும் சொல்லிக் தந்தனர். ஆறு மாத காலம் பயிற்யில் சிறுவன் ஈடுபட்டிருக்கின்றார். உலகில் உள்ள பெருவாரியான நாடுகளின் பெயர்களை கற்ற சிறுவன் லோகித், முதற்கட்டமாக அதிவேகமாக நாடுகளின் பெயர் மற்றும் ஸ்பெல்லிங் உச்சரித்தார். இதனை அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் “FASTEST KID TO RECALL SPELLINGS OF ALL COUNTRIES” என்று சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. ABCD என்பதனை கற்று தட்டு தடுமாறும் குழந்தைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp