ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கினார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் திரு முத்துராஜா அவர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் Single Bar, Douple Bar, high jump ஆகியவற்றை வழங்கினார் .

மேலும் பள்ளியின் சார்பாக வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவர்களுக்கும் கோப்பைகளை வழங்கினார் .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் உரையாற்றிய உதவி காவல் ஆய்வாளர் :

மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிய வேண்டும் என்றும் அனைவரும் உயர்ந்த லட்சியத்துடன் படித்து கல்விச் செல்வத்துடன் வெளியேறி உயர்ந்த அரசு பதவிக்கு வரவேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் அறிவுரை கூறினார் , மாணவர்கள் கெட்ட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றும்

அதற்கான வழிமுறைகளையும் கூறி படிப்பு மற்றும் விளையாட்டு சம்பந்தமாக எந்த விதமான உதவியாக இருந்தாலும் தன்னிடம் கூறலாம் என்றும் தன்னுடைய தொலைபேசி எண்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp