தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சந்திரகிரி ஊராட்சி கீழச்செய்த்தலை கிராமத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு சர்க்கரை அளவு பரிசோதனை செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் பெருந்தலைவர் எல்.ரமேஷ் அவர்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதன் அவர்கள், ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி, கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
முகாமில் பொதுமக்களுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மைய தனலட்சுமி, அக்ஷய் கமல் மருத்துவமனை மருத்துவர்கள், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், இசிஜி, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், கண் பரிசோதனை, அழுத்தம் உள்ளிட்டவர்களுக்கு ரத்த மருந்து வழங்கினர்.
இந்த முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் கீழச்செய்த்தலை மா கம்யூனிகேஷன் நிறுவனர் மாரிதாஸ் , புவிராஜ் கட்டபொம்மன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார். இந்த மருத்துவ முகாமில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.