வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாக பயிற்சி மையத்தில்(ஆப்கா) சிறை துறை அதிகாரிகளுக்கான ஐந்து நாள் புத்தாக்கப் பயிற்சி திங்கட்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஆப்கா இயக்குனர் எம்.சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார். துணை இயக்குனர் எம்.ஆர். பாஸ்கர் அவர்கள் வரவேற்றார் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு வரும் நபர்களை சீர்திருத்தி கல்வி கற்பித்து அவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர சிறையில் இருந்து விடுதலையாகி செல்வோருக்கு தேவையான பல உதவிகளையும் அரசு செய்து வருகிறது.
கைதிகளை சீர்படுத்துவது தான் காவலர்களின் முக்கிய பணி எனவே சிறை துறையினர் சிறப்பாக பயிற்சி பெற்று கைதிகளை நல்வழிப்படுத்திட வேண்டும் என்றார். இப்பயிற்சியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 31 சிறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த பயிற்சி வரும் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஆப்கா பேராசிரியர்கள் மதன் குமார், ப்யூலா இமானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.