தமிழகம் முழுவதும் பல்வேறு குடும்பங்கள் லாட்டரி மோகத்தால் சீரழிந்து வந்த நிலையில் தமிழக அரசு அதை தடை செய்தது அவ்வாறு உள்ள சூழ்நிலையில் புற்றீசல் போல் சில விஷமிகள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கள்ளத்தனமாக விற்பதும், ஒரு சிலர் கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் காவல் துறையினரின் கடும் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் வருகின்றனர்.
அதேபோல், தற்போது கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 47) என்பவரை நேற்று மதியம் 2 மணி அளவில் குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் 3 நம்பர் லாட்டரி தொடர்பாக போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராக்கியப்பன் அவர்கள் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது கைபேசியில் மூணு நம்பர் லாட்டரி நடத்தி வருவதற்கு உண்டான ஆதாரங்களுடன் அவரது கைபேசியை கைப்பற்றி அவரது ஆட்டோவையும் கைப்பற்றி காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது D3 ps CT No:240/2023 u/s 5 r/w 7(3) TNLR ACT என்ற தண்டனை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .
இதனால் போத்தனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.