தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார்.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரூ .8 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சத்திரப்பட்டி கிளைச் செயலாளர் ஞானச்சாமி, மாவட்டஅம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அய்யாத் துரைப்பாண்டியன், அகிலாண்டபுரம் கிளை செயலாளர் லெனின் மாடசாமி, சத்திரப்பட்டி அம்மா பேரவை செயலாளர் வர்கீஸ், சத்திரப்பட்டி இளைஞரணி ஜெய்சிங் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜதுரை, ஆவுடையாபுரம் கிளை செயலாளர் மாணிக்கம், முத்துராஜ், கனகராஜ் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.