சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரபட்டியில் வசித்து வருபவர் நரிஅழகன் (வயது50). இவரது மனைவி செல்லம்மாள்(45). இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இந்நிலையில் மனைவி செல்லம்மாள் தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி பல நாட்கள் வெளியே தங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே மனைவி செல்லம்மாளின் நடத்தை மீது சந்தேகப்பட்டு நரிஅழகன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று காலை கணவன் மனைவிக்கிடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி செல்லம்மாள், வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இரவு 11 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பிய மனைவி செல்லம்மாள், உருட்டு கட்டையை எடுத்து கணவர் நரிஅழகன் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த நரிஅழகன், படுகாயமடைந்து கட்டிலில் சரிந்து விழுந்த நிலையில் இறந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து தப்பிய மனைவி செல்லம்மாள் தலைமறைவானர். நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்ததால் யாரும் கவனிக்காத நிலையில், காலையில் தந்தை இறந்து கிடப்பதைக் கண்ட நரிஅழகனின் இளையமகள், அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர், தென்சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர், சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து நரிஅழகனின்
உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவக்கினர். அதன் தொடர்ச்சியாக, கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்லம்மாளை சைபர் க்ரைம் காவலர்கள் உதவியுடன் சிங்கம்புணரி காவல்துறையினர் கைது செய்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.