புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வதுபிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புதூர் வட்டார இராஜகம்பள மகாஜன சங்கம் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 47க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் பங்குபெற்றன. புதூர்-அருப்புக்கோட்டை சாலையில் நடந்தது. நேற்று மாலையில் நடந்த போட்டியில், சின்ன மாடு,பூஞ்சிட்டுடு என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்,42 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த இரு பிரிவாக நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ.,சின்னப்பன்,புதூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாட்டு வண்டி பந்தய நிகழ்வில்,புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தனவதி, விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன்,விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்,ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார்,புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன் மற்றும் புதூர் வட்டார ராஜகம்பளம் மகாஜன சங்க நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர். இப்போட்டிகளை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.