அடி ஆட்களுடன் வந்த சரவணன்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற டாரஸ் வாகனத்தை புகைப்படம் எடுத்த செய்தியாளரை தாக்கி மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள திவான் சாபுதூர் வழியாக செல்லும் டாரஸ் வாகனங்கள் அதிவேகமாகச் சென்று பொது மக்களை அச்சுறுத்தி வந்து கொண்டிருந்தன இந்த நிலையில் நேற்று பணி நிமித்தமாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நாளைய வரலாறு புலனாய்வு இதழ் மற்றும் புலனத் தளத்தின் தமிழக துணை தலைமை நிருபர் சுரேஷ்குமார் அவர்கள் பொது மக்களை அச்சுறுத்தும்படி சென்ற டாரஸ் வாகனங்களை பார்த்து பதை பதைத்துப் போனார் உடனடியாக பொதுமக்களின் உயிருக்கு உறு விளைவிக்கும் மற்றும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற டாரஸ் வாகனங்களை புகைப்படம் எடுத்து அது சம்பந்தமான செய்திகளை சேகரித்தார்.
கருங்கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டாரஸ் வாகனம்.
இவர் புகைப்படம் மற்றும் செய்தி சேகரித்ததை பார்த்த டாரஸ் வாகனத்தைச் சார்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த அவரை செய்தி சேகரிக்க விடாமல் அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்கள் மேலும் செய்தியாளர் வீட்டுக்கு சென்ற பிறகும் வீட்டுக்கே வந்து சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் சுரேஷ்குமார் அவர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுத்த சரவணன்.
செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களின் நிலைமை என்னவென்று சொல்வது. டாரஸ் வாகனங்களின் அதிவேகத்தால் திவான்சாபுதூர் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்பதை உண்மை. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்தி களுக்காக,
-ஈஷா.ராஜேந்திரன்.