திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் 14 .6. 2023 ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திருப்பூர் ரோடு பெருமாள் மலை அருகில் ரோந்து பணியில் இருந்த போது TN 49 CF 2345 என்ற மாருதி ஸ்விப்ட் காரின் டயர் வெடித்து பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
அந்த வழியே போகும்போது இந்த காரின் ஓட்டுநரை விசாரிக்க அந்தக் காரின் ஓட்டுநர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் குருதேவன் சொந்த வேலையாக பெருமாநல்லூர் சென்று விட்டு திரும்ப தஞ்சாவூர் போக தனது உறவினர்களுடன் வந்து கொண்டிருந்தபோது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எதிர்பாராத விதமாக காரின் பின் டயர் வெடித்து விட்டதாகவும் காரின் டயரை மாற்ற தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி உதவி கேட்ட பொழுது
இரவு நேரம் என்பதால் உதவி செய்ய யாரும் முன் வரவில்லை என்று சொன்னார் உடனே உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் அவர்கள் தேவையான உபகரணங்கள் ஏற்படுத்திக் கொடுத்து பழுதடைந்த டயரை மாற்றி காரை சரி செய்யும் வரை உடனிருந்து உதவி புரிந்து நல்ல முறையில் வழி அனுப்பி வைத்தார்.
மனிதநேயத்துடன் காவல்துறையில் அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.