கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை உட்கோட்டம் வால்பாறை சராகத்துக்கு உட்பட்ட கோட்டூர் தென்சங்கம்பாளையத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா 06.06.2023 இன்று நடைபெற்றது.
புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் காணொளி மூலமாக சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அவர்கள் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி.பிருந்தா அவர்கள் மற்றும் வால்பாறை உட்கோட்டம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி, ஆனைமலை உட்கோட்ட ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர்கள் பொன்ராஜ், நாகராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-M.சுரேஷ்குமார்.