கோவை சிறுவாணி சாலை ஆலாந்துறை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்கண்ணாடி கடை நடத்தி வருகிறார், இவரது கணவர் ஐ. டி. நிறுவனத்தில் வேலை தேடி வந்தார், அந்த சமயத்தில், மத்துவராயபுரத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்கள், 2 மகள்களில் ஒருவர் தான் ஐ. டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், உங்கள் கணவருக்கு வேலை வாங்கி தருகிறேன்.
அதற்கு பணம் செலவாகும் என கூறி இருக்கிறார், அதை உண்மை என நம்பிய இளம்பெண் 3 தவணையாக ரூ. 3 லட்சம் கொடுத்துள்ளார், ஆனால் அவர்கள் சொன்னபடி இளம்பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போதும் திருப்பிக் கொடுக்க வில்லை, இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் செய்தார், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், தனது உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தநிலையில் இன்று இளம்பெண்ணின் தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர், இதனால் அங்கு பரபரப்பு நிலவியது, தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார்இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பணம் வாங்கிய தாய்- 2 மகள்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.