அனைவருக்கும் இ-சேவை மையம் வழங்கும் குறைகளை களைந்து, வரன்முறை செய்யக் கோரி இசேவை மைய உரிமையாளர்கள் நலகூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இசேவை மைய உரிமையாளர்கள் நலகூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் பொது சேவை மையமும் (CSC), 5 ஆண்டுகளாக தமிழக அரசின் இ-சேவை மையமும் முறையான அரசு அனுமதி பெற்று முழு நேர தொழிலாக நடத்தி வருகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும் இந்த தொழிலை நம்பியே உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு “அனைவருக்கும் இ.சேவை மையம்” என்ற திட்டத்தின் மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எந்த ஒரு வரைமுறை மற்றும் நிபந்தனைகளின்றி, மையங்களை நேரில் ஆய்வு செய்யாமல் இ-சேவை மைய ஐடி வழங்கி வருகிறது. இதனால் தெருவுக்கு தெரு இ-சேவை மையம், ஒரே தெருவில் இரண்டு, மூன்று மையங்கள் உருவாகியுள்ளது. இதனால் அனைவரும் வருமான வாய்ப்பினை இழந்துள்ளோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இ-சேவை மையம் நடத்துவதற்கு நாங்கள் சுமார் 3 லட்சம் வரையிலான முதலீடுகள் செய்துள்ளோம். அரசின் இத்திட்டத்தால் எங்கள் தொழில் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. எங்களை போன்ற நபர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இ-சேவை மையம் வழங்குவதற்கு பல்வேறு வரையறைகள் கூறியும் இரண்டு ஆண்டு காலம் கால தாமதப்படுத்தியும் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே ஒப்புதல் கொடுத்தார்கள்.
அவ்வாறு வழங்க பட்ட இ-சேவை மையம் தற்போது வெறும் அரசு இலவசமாக வழங்கிய மடிகணினி மற்றும் ஒரு பிரிண்டர் மட்டும் வைத்து கொண்டு இ.சேவை மையத்திற்கு விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று தற்போது வீட்டில் வைத்து சான்றிதழ் விண்ணப்பித்து கொடுக்கிறார்கள், இதனால் இ.சேவை மையத்திற்கான தனித்துவம் இல்லாமல் போய்விட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இலவசமாக சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படுகிறது. இது மிக தவறான நடைமுறை. இப்படி இலவசமாக செய்வதால் பொதுமக்கள் எங்களை போன்ற இ-சேவை மையங்களுக்கு வருவது குறையும். தற்சமயம் அனைத்து பள்ளிகளிலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது மிக மிக மோசமான பாதிப்பை எங்கள் தொழிலில் ஏற்படுத்தும். எங்களை போன்ற இசேவை மையங்களின் முக்கிய பணி மற்றும் வருவாய் வாய்ப்பே மாணவர்களுக்காக விண்ணப்பிக்கப்படும் சாதி, வருமானம், இருப்பிட, பிறப்பிட, OBC போன்ற சான்றிதழ் விண்ணப்பம் மட்டுமே. முழுக்க முழுக்க இத்தொழிலை மட்டுமே நம்பி வாழும் சுமார் உரிமையாளர்கள் குடும்பமும் 200 பணியாளர்கள் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களும் கணினி மற்றும் பிரிண்டர், டேபிள் இருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம். இல்லங்களுக்கு நேரடியாக இ-சேவை சென்று மைய ஐடி சான்றிதழ் விண்ணப்பித்து கொடுக்கலாம் என்று அரசு அறிவித்திருப்பது மிகப்பெரிய வருவாய் மற்றும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும் முன்னர் எங்களை போன்ற TACTV மற்றும் CSC அனுமதி பெற்று முறையாக செயல்பட்டு வரும் இ-சேவை மைய உரிமையாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் பற்றி சிறிதளவும் கவனத்தில் கொள்ளாதது மிகவும் வருந்ததக்கது. கண்டிக்கதக்கது.
ஆகவே அவசரகதியில் வழங்கப்பட்ட இ.சேவை மைய ஐடி-க்களை முறையாக ஆய்வு செய்து தகுதியற்ற இ.சேவை மையங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.