தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 61 பஞ்சாயத்துகளில் இன்று 31 பஞ்சாயத்துகளுக்கு கீழமுடிமன், ஜம்பிலிங்காபுரம், மருதன்வாழ்வு, அகிலாண்டபுரம், குலசேகரநல்லூர் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள 30 கிராம பஞ்சாயத்துகளுக்கு நாளை நடைபெறும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பில் களநீர் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர்த் தேவை பற்றி ,மழைநீர் சேமிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் எவ்வளவு உப்பு குளோரைடு இரும்பு சத்து இருக்க வேண்டும் என சோதனை செய்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தண்ணீரின் தரம், தண்ணீர் பகுப்பாய்வு, தண்ணீர் பாதுகாப்பு ,தண்ணீர் சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு ,சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட இரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் கோபால் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார், உதவி நிர்வாகப் பொறியாளர் ஜான் செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன், விமல், பூர்ணிமா, முத்து லட்சுமி, விஜய், முகுந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியை லா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் துவங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.