தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கினார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது பின்னர் சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு பாடல் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார், பின்னர் பள்ளியின் சார்பில் கூடுதல் கட்டிடம் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது அதை விரைவில் பரிசீலனை செய்து கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார், மாணவர்கள் அனைவருக்கும் திறமை உண்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும் நிச்சயம் ஒரு நாள் உங்கள் லட்சியம் வெல்லும் என அறிவுரைகள் வழங்கினார் மற்றும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விரைவில் நமது சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சம் பள்ளி மாணவ மாணவியர் பொதுமக்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறினார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வநாயகம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய துணை பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிதம்பரம், சண்முகையா, பழனி ஒன்றிய குழு உறுப்பினர்கள்
சுமதி இம்மானுவேல், ராஜேஷ்வேல் மாவட்ட பிரதிநிதி சத்திய ராஜன் ஒன்றிய துணைச்செயலாளர் மாரியப்பன் ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் கிளை செயலாளர் அய்யம்பிள்ளை இளைஞரணி முருகன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய – ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.