தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் புது காலனி பகுதியை ராமசாமி மகன் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலணியில் உள்ளது இந்நிலையில் நேற்று முன்தினம் சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ் (75), குலசேகரநல்லூரைச் சேர்ந்த அரியநாயகம் (60) ,வடக்கு ஆரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்(45), கவர்னகிரியை சேர்ந்த மாரிமுத்து (50) ஆகிய நான்கு நபர்களும் சேர்ந்து கிணற்று அருகில் உள்ள மோட்டார் பம்பு செட் ரூமில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது தரைத்தளம் இடிந்து கிணற்றிற்குள் விழுந்ததில் நான்கு பேரும் இடிபாடுகளும் சிக்கி கிணற்றிற்குள் விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த மரியதாஸ், சுப்புராஜ் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் மாரிமுத்து, அரியநாயகம், ஆகிய இருவரையும் உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் உயிரிழந்த மரியதாஸ், சுப்புராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மணியாச்சி டி எஸ் பி லோகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வடக்கு ஆரைக்குளம் மற்றும் சிந்தலக்கட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து ஓட்டப்பிடாரம் மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு ஒரு மணி தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர் போலீசாரின் பேச்சு வார்த்தையை அடுத்து கைவிட்டனர்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையம் முன்பாக பொதுமக்கள் திரண்டனர். அப்போது ஏ டி எஸ் பி உன்னிகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் , துணை சேர்மன் காசி விசுவநாதன் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூபாய் 4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தோட்ட உரிமையாளருடன் பேசி உரிய இழப்பீடு தொகையும் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் மணியாச்சி டிஎஸ்பி பொறுப்பு வெங்கடேசன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் துறை ஆய்வாளர்கள் அதிவிரைவு படை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் சுமுகமாக முடிவு பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.