தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் சார்பாக திமுக அரசை கண்டித்து ஓட்டப்பிடாரம் பஜார் பகுதியில் நேற்று மாலை ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்து 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை கண்டிக்கத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம் , தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூபாய் 1000 வழங்குவதாக வாக்குறுதி தந்த திமுக அரசு தற்போது பெரும்பான்மை பெண்களுக்கு உரிமை வழங்க மறுக்கிறது. ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து திமுக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது, மணல் கல்குவாரிகள் செயல்பாட்டில் ஊழல் மலிந்து கனிமவளக் கொள்ளை நடந்து வருகிறது, தமிழகத்தின் இயற்கை வளம் வெளி மாநிலத்திற்கு நடத்தப்படுகிறது, அங்கன்வாடி மையங்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் குழந்தைகளுக்கு பாதுகாப்புமின்றியும் செயல்பட்டு வருவதை வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. ஊரெங்கும் கள்ளச்சாராயம், தெருவெல்லாம் கஞ்சா விற்பனைக்கு, அப்பாவி மக்களை அடிமையாக்கும் ஒரு நம்பர் லாட்டரி போன்ற சட்ட விரோத சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திமுக அரசு திணறுகிறது.
கல் விற்பனையை தடுக்கும் திமுக அரசு எரி சாராய டாஸ்மாக் கடைகளை தானே நடத்தி மக்களை வஞ்சிக்கிறது. தினந்தோறும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க திமுக அரசால் முடியவில்லையே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழை குடும்பங்களை காக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை திமுக அரசு காற்றில் பறக்க விட்டது, அனைத்து உணவுப் பொருட்களின் தக்காளி முதல் வெங்காயம் வரை, பருப்பு முதல் அரசி வரை விலைவாசி உயர்வு இறக்கை கட்டிப் பறக்கிறது கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. அனைவருக்கும் வீடு , வீடு தோறும் குடிநீர் கிராமந்தோறும் சாலைகள் என மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதில் திமுக அரசு ஊழல் செய்கிறது.
மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாகன பதிவு கட்டணங்கள் , பத்திர பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான வரி உயர்வு விதித்து தமிழக மக்களை வஞ்சிக்கிறது. இந்து கோயில்களை இடித்துச் தள்ளும் திமுக அரசு தமிழகத்தில் பக்தர்களின் மனம் வேதனை மட்டுமல்லாமல் திமுக மத விரோத போக்கை கடைபிடிக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன, இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் கல்வி வளர்ச்சி தடைபடுகிறது. ஆரம்ப சுகாதார மையங்களில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் பணியாளர்கள் மருந்து பொருட்கள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் லிங்கராஜ், பெரியசாமி ஜி நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர், அருண்குமார் தொழில்துறை பிரிவு மாவட்ட செயலாளர், R.நாகராஜ் BA,DIFS தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர், பேச்சியம்மாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர்,மங்கள ரோஸ். S. மாவட்ட பொதுச் செயலாளர் மகளிர் அணி (.ஒன்றிய பிரபாரி )ஒன்றிய பொதுச்செயலாளர்கள் முருகப் பெருமாள் மாரிமுத்து அணி பிரிவு ஒன்றிய தலைவர்கள் முனியசாமி மகேஷ் குமார், விவசாய அணி பொதுச் செயலாளர் முனியசாமி, கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் கோயில் பிள்ளை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் முனியசாமி, ஒன்றிய செயலாளர் அனந்தப்பன், மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..மாரிமுத்து ஒன்றிய பொது செயலாளர் நன்றி கூறினார்..
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.