தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி, தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், உள்ளிட்ட இடங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிட மாணவர், மாணவியர் விடுதிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்வுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் வந்தனர்.
இந்தக் குழுவினர்க்கு முத்துகருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநரும், பள்ளித் தலைமை ஆசிரியருமான பாலமுருகன் கருப்பசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர் மாணவிகளிடம் குறைகளை கேட்டனர். இதனைத் தொடர்ந்து சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சமையல் அறையில் மதிய உணவை சாப்பிட்டு பார்த்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் சாப்பாடு தயார் செய்யும் விதம் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் உள்ள கழிவறை உணவு அருந்தும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆய்வில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சந்திரன் (திருத்தணி), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சிவக்குமார் (மயிலம்), சேவூர்ராமச்சந்திரன் (ஆரணி), நாகைமாலி (கீழ்வேளூர்), பரந்தாமன் (எழும்பூர்), ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்), மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நாணயம், முத்துகருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளித் தலைமை ஆசிரியர் பாலமுருகன் கருப்பசாமி, சில்லாங்குளம் பஞ்சாயத்துத் தலைவர் சரோஜா கருப்பசாமி, தாசில்தார் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆணையர் சிவபாலன் மற்றும் ராம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.