ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு ஒன்றிய செயலாளர் கரன்சிங் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குளத்தின் மூலம் பெறப்படும் நீர்ப்பாசனம் விவசாயத்திற்கு மற்றும் கால்நடைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பெரியகுளத்தில் டன் கணக்கில் மதுபாட்டில்களும் இறைச்சி கழிவுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் குப்பைகளை கொட்டி வருவதால் நீர் மாசுபடுவது மட்டுமின்றி கால்நடைகளும் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தினந்தோறும் மது பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்கே குப்பை கொட்டாதீர் மற்றும் இங்கே மது அருந்தாதீர்கள் மீறினால் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது சுற்றுப்புற சூழல் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் , சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உலகையா , ஓட்டப்பிடாரம் நகரச் செயலாளர் சிவஞானம் ஓட்டப்பிடாரம் சுற்றுச்சூழல் மாவட்ட பிரதிநிதி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.