புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று 14/07/2023 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடித்து வரும்போது குத்தூஸ் பள்ளி எதிரில் காசிம் கொல்லையில் மூன்று தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு செனை ஆட்டை கடித்து குதறிக்கொண்டிருந்தது.
இதை கண்ட தொழுகை முடித்து விட்டு வந்த அனைவரும் நாய்களிடமிருந்து ஆட்டை மீட்டு பார்த்தபோது தொண்டை முதல் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அந்த வழியாகத்தான் பள்ளிக்கு செல்லும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் சென்று வருகின்றனர். எனவே இந்த தெரு நாய்களால், மனிதர்களுக்கு பேராபத்து ஏற்படும் முன்பே பேரூராட்சி நிர்வாகம் விழிப்படைந்து உடனடியாக கறம்பக்குடி நகர் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம், என புதுக்கோட்டை மாவட்ட மஜக செயலாளர்
ஜான் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.