தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் , கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் (100 x100) பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தூத்துக்குடி அருகில் உள்ள புதூர்பாண்டியாபுரம் ஊராட்சியில் வைத்து நடைபெற்றது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா முனியசாமி மரக்கன்று நடவுப் பணியை துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் களக்காடு தங்க இசக்கியம்மாள் , ஊராட்சி வார்டு உறுப்பினர் முருகன் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் த.சங்கீதா , முத்துக்கனி, மாரியப்பன், கருப்பசாமி, சசிகலா, சந்தனமாரி , இயற்கை ஆர்வலர்கள் கஸ்தூரி, தமிழ்செல்வி, பார்வதி பனையூர் வில்சன் , ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.
விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணியை ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன் சிறப்பாக செய்து கொடுத்திருந்தார். நிறைவாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் 2023 ஆம் ஆண்டை கலைஞர் நூற்றாண்டு விழாவாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடத்தி ஒவ்வொரு வட்டாரங்களிலும் பத்தாயிரம் மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு,