கோவை மாவட்டம் சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் உள்ள காந்திஜி ரோட்டில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் குடமுழுக்கு விழா வருகிற ஞாயிறு (09-07-2023) அன்று நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவிற்கான முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி இன்று குறிச்சி குளம் அருகே உள்ள ஸ்ரீ பொங்காளி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை உடன் தொடங்கியது இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் திறளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமூக பெரியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முளைப்பாரி ஊர்வலமானது குறிச்சி ஸ்ரீ பொன்காளியம்மன் கோவிலில் இருந்து காந்திஜி ரோட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வரை செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சிக்காக மதுரை லோட்டஸ் அபிநயா ஜெயபிரகாஷ் குழுவினரின் கலைஞர்கள் வந்து காளி வேடம்,கருப்புராயன் வேடம், ஐயனார் வேடம் , மான் வேடம், மயில் வேடம் உள்ளிட்ட வேடங்களில் நடனமாடி செல்ல அதனைத் தொடர்ந்து சிறப்பான மேல தாளத்துடன் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது .
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து சமூக பெரியோர்கள், ஊர் பெரியோர்கள் ஸ்டார் புரமோட்டர்ஸ் திரு.ஸ்டார் வெங்கடேஷ் திரு.முகமது ஹாரூன் பாய், இக்பால் பாய்,அன்சாரி பாய், முகமது ஈஷா பாய் உள்ளிட்ட இஸ்லாமிய சகோதரர்களும் ராஜம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். சௌந்தரவேல் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரு. குறிச்சி சிவா அவர்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கருணாகரன், அரவிந்த், விஜய் பாபு, சிவராஜ், கார்த்தி, ரவிக்குமார், மற்றும் கோவில் கமிட்டியினர் அப்பகுதி பெரியார்கள் ஆகியோர் இணைந்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமூக பெரியோர்களும் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. இதுபோன்று அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி ஒரு விழாவினை சிறப்பிப்பது.
குறிச்சி ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் இதுவே முதல் முறையாகும். இதுபோன்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் வெகுவாக பாராட்டி வரவேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், ஈசா.