குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இயங்கிவரும் ஆதர்ஷ் தனியார் பள்ளியால் காலையில் மற்ற பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் அவசர வேலைக்கு செல்பவர்கள் தகுந்த நேரத்தில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோரும், பள்ளிக்கு வரும் வாகன ஓட்டிகளும் தான். இது அங்கு பணியில் நிற்கும் போக்குவரத்து காவலரின் சட்டை பையில் அணிந்திருக்கும் கேமராவில் பார்த்தாலே தெரியும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தங்கள் குழந்தைகளை பள்ளி வாசலில் தான் இறக்கிவிட வேண்டும் என்ற வருபவர்கள் தங்கள் பிள்ளைகளை இறக்கி விட்டுவிட்டு சற்று தள்ளி சென்று வண்டியை திரும்பாமல் நின்ற இடத்திலேயே திருப்புவதாலும், எதிர் திசையில் இருந்து பள்ளிக்கு வருபவர்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் குறுக்கே வருவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் நிற்க வேண்டிய நிலை எற்படுகிறது.
ஊருக்கு உபதேசம் சொல்லும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொதுமக்கள் மீது அக்கறை இருந்ததாக தெரியவில்லை. போக்குவரத்து காவல்துறை இரண்டு நாள் அங்கு போக்குவரத்து விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்ததால் போக்குவரத்து ஒழுங்காகும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தயவு செய்து இதில் தனி கவனம் செலுத்தி மற்ற பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் தாமதமின்றி செல்ல பல ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.