கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பாளப்புழாவை சேர்ந்தவர் டோல் சன் (வயது43). இவர் அம்பாளப்புழா போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அம்பாள புழா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு லால் ( 29) என்பவர் புகுந்து தாக்குதல் நடத்தி தகராறு செய்தார்.
ஓட்டலில் இருந்த பொருட்களை நாசம் செய்து சூறையாடினார். இது குறித்து அம்பாளப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு வாலை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர். போலீசார் வருவதை அறிந்த விஷ்ணு லால் அங்கிருந்து தப்பினார் . பின்னர் அவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் . அவரது செல்போன் டவர் சிக்னல் மூலமாக அவரது இருப்பிடம் அறிந்த கேரள போலீசார் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். கதவைத் தட்டி அவரை அழைத்த போது அவர் கதவை திறக்க மறுத்துவிட்டார்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணுலால் ஓட்டல் அறையில் இருந்த இரும்பு கம்பியால் டோல்சன் மற்றும் இன்னொரு போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் டோல்சன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை பீளமேடு போலீசார் விஷ்ணு லாலை கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விஷ்ணு லால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. பிரபல ரவுடியான இவர் கோவையில் தன்னை பிடிக்க வந்த போலீசாரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.