கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே சோதனை செய்து போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
அதுபோன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு மது போதையில் வாகனம் இயக்குவோர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவோர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்வோர் மற்றும் வாகனத்திற்கான சான்றிதழ்களை முறையாக வைத்துக் கொள்ளாதவர்கள் போன்றோரை சோதனை செய்து உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரேஸ்கோர்ஸ் பகுதியில் மட்டும் ஐந்து இடங்களில் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனையால் ரேஸ் கோர்ஸ் பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் மேலும்
இந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் ரேசில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அவர்களுடைய நடவடிக்கையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
-ஜாபர்.