சாட்சி சொல்ல இருந்தவர் வெட்டிப்படுகொலை.. ஏர்வாடியில் பரபரப்பு!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் என்ற கக்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் பிச்சைக்கண்னு மகன் முருகன். கடந்த 2021-ம் ஆண்டு தளபதிசமுத்திரம் குளத்தில் மீன் குத்தகை எடுப்பதில், அருணாசலம் தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது.பின்னர் அருணாசலத்தின் தரப்பினருக்கு மீன் குத்தகை ஏலம் வழங்கப்பட்டது.

தனது தரப்பினருக்கு மீன் குத்தகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முருகனுக்கு, அருணாசலத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் அருணாசலம், முருகனுக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சி சொல்ல முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் முருகன், அருணாசலத்திடம் தனக்கு எதிராக சாட்சி கூற கூடாது என்று கூறியுள்ளார். மேலும் உறவினர்கள் மூலம் சமரசமும் செய்துள்ளார். ஆனால் அதற்கு அருணாசலம் மறுத்து விட்டார். மேலும் கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருணாச்சலம் 07-07-2023 அன்று இரவு அதேஊரில் உள்ள தனது  மகள் முத்துசெல்வி வீட்டு முன்பு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்ப கும்பல் ஒன்று அருணாசலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி ஓடியது. இதில் அவர் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அருணாச்சலத்தை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் பற்றி ஏர்வாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

– தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp