கோவையில் நடைபெற்ற சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியில் பெரியவர்கள், குழந்தைகள் என பலரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். வீட்டில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லபிராணிகளான நாய்கள், பூனைகளின் முக்கியத்துவத்தை குறித்து வெளிப்படுத்தும் விதமாக கோவையில் முதல்முறையாக பெட் கார்னிவல் மற்றும் பூனைகள் கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் துவங்கியயது.
இரண்டுநாள் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் மற்றும் பூனைகள் பங்கேற்றது.தொடர்ந்து செல்லபிராணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்க உள்ளனர். மேலும் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரன் கூறியதாவது,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் இன்றும் நாளையும் செல்ல பிரானிகள் கண்காட்சி மற்றும், சர்வதேச பூனைகள் கண்காட்சி நடைபெறுவதாகவும்இதில் ,200″க்கும் மேற்பட்ட நாய்களும் 150″க்கும் மேற்பட்ட பூனைகளும் அனைத்து விதமான செல்ல பிரானிகளும் இதில் கலந்து கொண்டுள்ளது.
மேலும் ஒட்டகம், மாடுகள், பாம்புகள், குதிரைகள் இடம் பிடித்துள்ளது, மேலும் இந்த கண்காட்சியில் இந்தியாவில் விலை உயர்ந்த நாய்கள் கூட கண்காட்சியில் இடம்பிடித்துள்ளது எனவும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசம் அனுமதி என இவ்வாறு தெரிவித்தார்.இதில் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பலரும் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.
-சீனி, போத்தனூர்.