பாரத ரத்னா பசுமை நாயகன் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் ஐயா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செங்கல்பட்டு A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அடுத்து தலைமை ஆசிரியருக்கு இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், A.P.J அப்துல் கலாம் ஐயாவின் திரு உருவப்படம் மற்றும் மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அசாருதீன், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் குழலரசன், நகர செயலாளர் ஆகாஷ், செங்கல்பட்டு நகர செயலாளர் புகழ் இவர்களுடன் நிர்வாகிகள் சுந்தர், லக்ஷ்மணன் உள்ளிட்டோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இது குறித்து அபுபக்கர் சித்திக் கூறுகையில் இது போன்ற நற்பணிகளை கால நேரம் பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மனதோடு மக்களுக்காக களப்பணி செய்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
-M.சுரேஷ்குமார்.