மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். கடந்த மாதம் இங்கு நடந்த கோயில் திருவிழாவின் போது நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் நடந்தது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பைச் சேந்தவர்கள் ஊருக்குள் புகுந்து திருமோகூரைச் சேர்ந்த பட்டியலின தரப்பை சார்ந்த மக்களை தாக்கினர். இதில் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. இதில் காயமடைந்த மணிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டடவர்கள் மதுரை நீதிமன்றத்தில் 03-07-2023 அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் ஆத்திரமடைந்த கைது செய்யப்பட்ட தரப்பினைச் சேர்ந்தவர்கள், திருமோகூர் நொண்டக்கோயில் தெருவைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் செல்வம் (25) என்பவர் 04-07-2023 மதியம் சுமார் 2 மணிக்கு திண்டியூர் கண்மாய் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். மாடு மேய்க்கச் சென்றபோது, அங்கு டூவீலரில் வந்த 3 பேர் கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. முதுகு, தொடை பகுதியில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
இதனிடையே, செல்வத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது தரப்பைச் சேர்ந்தோர் திருமோகூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தால் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்று எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி சந்திரசேகர் ஆகியோரும் விசாரித்தனர்.
ஏற்கனவே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோருக்கான ஜாமீன் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து திருமோகூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘செல்வம் மாடு மேய்க்கச் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற கும்பல் தாக்கியதாக தெரிகிறது. தன்னை தாக்கியவர்களின் பைக்கை எடுத்துக் கொண்டு செல்வம் தப்பி இருக்கிறார். கும்பல் விரட்டியதால் வேறு வழியின்றி பைக் பாதியில் போட்டுவிட்டு தப்பியதாக செல்வம் கூறுகிறார். இதுபற்றி தொடர்ந்து விசாரிக்கிறோம்’’ என்றனர்.
இதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபு(29) என்ற பட்டியலின இளைஞரை எதிர் தரப்பை சார்ந்தவர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதில் காயமடைந்த பிரபு தப்பி ஓடினார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அன்பு (23), சுரேஷ்(19), ராமர்(24), மற்றும் 18 வயது சிறுவன் உள்பட நான்கு பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்திலும் மாவட்ட காவல்துறையின் மீது அதிருப்தியிலும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே திருமோகூரில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
– தமிழரசன், மேலூர்.