தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், வீரபாகு, துறைமுகம் ராமசாமி, வக்கீல் ரகுராமன், சுரேஷ், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், ஜோசப், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.