நிர்மலா மாதா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!!!
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களுள் ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’ ஆவர். குறிப்பாக தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின்
கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் முதல்வரான காமராஜர் பிறந்த தின விழாவை கல்வி வளர்ச்சி நாளாக 2006ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது ஜூலை 15 ஆன இன்று நிர்மலா மாதா மேல்நிலைப் பள்ளியில் கருப்பு காந்தி காமராஜரின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது மட்டுமல்லாது அனைத்து மாணவர்களுக்கும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி வினா விடை போட்டிகள் நடத்தப்பட்டன.இதனை தமிழ் துறை ஆசிரியர்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர் இந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.