புதுக்கோட்டை இளைஞர்களிடையே தலைதூக்கும் ரவுடியிசம்.. பொதுமக்கள் அச்சம் !!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  கடந்த சில நாட்களாகவே  கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு நடந்து வருவதாகவும் இதனை காவல்துறையினர் கண்காணிக்க தவறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் 19-07-2023 அன்று மதியம் திரண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் இருதரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த பெண் பயணிகள் மற்றும் வயதானவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினர்.

அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் வந்து விசாரித்த போது பெண்களை கிண்டல் செய்ததில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது.

இச்ம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை கொண்டு மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து பரம்பூரைச் சேர்ந்த வினோத் என்ற நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களிடம் விசாரணை மேற்கொள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை நகரில் கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுவது, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேரி வருகின்றன. பதிவு எண்கள் இல்லாத இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது நாய்கள் குரைப்பது, குழந்தைகள் அழுவது போன்ற வினோதமான ஒலிஎழுப்பும் ஏர்ஹாரன்களை பொருத்திக்கொண்டு சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் செயல்களிலும் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் நடந்து செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ள சாலையில் உயர்தர பைக்குகளில் வேகமாக சென்று ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இளைஞர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக தலையில் தொப்பி மற்றும் முகத்தை மாத்தினால் மறைத்துக்கொண்டு செல்கின்றனர். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் பூங்கா, குளக்கரை போன்ற மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் கஞ்சா புகைப்பது போதை ஊசி போட்டுக் கொள்வது மது அருந்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை நகராட்சி 41-வது வார்டு செல்லையா நகர் பின்புறம் உள்ள தனாதி குளத்துறை ஆகியவற்றில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை வாலிபர்கள் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் கலெக்டர் எஸ்பி டிஆர்ஓ என்று உயர் பதவிகளில் பெண் அதிகாரிகள் உள்ள நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நகரில் அதிகரித்து வரும் ரௌடிசத்தை இரும்புக்கரம் கொண்டு கொடுக்க காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் பள்ளி கல்லூரி வகுப்புகள் தொடங்கும் மற்றும் முடிவடையும் காலை மாலை நேரங்களில் கல்வி நிறுவனங்கள் பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் நகரின் விரிவாக்கப் பகுதிகளில் மாலை இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று புதுக்கோட்டை நகர பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp